முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2024      தமிழகம்      அரசியல்
DMK-2024-10-03

சென்னை, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு நேற்று ஆலோசனை நடத்தியது. 

வரும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்த குழுவில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு தி.மு.க.வில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும். மேலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன. அடுத்து வரும் தேர்தலில் தொகுதிகள் அடிப்படையில் பிரித்து நிர்வாகிகள் பணியாற்றும் வகையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து சந்தித்து, அவர்களிடம் கருத்து கேட்கவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு நேற்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஐவர் குழு, தகவல் தொழில் நுட்ப அணி உள்பட 3 அணிகளுடன் ஆலோசனை நடத்தியது. அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் நியமனத்திற்குப் பின் நடைபெற்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து