முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு டொனால்டு டிரம்ப் கோரிக்கை

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      உலகம்
Trump 2023-04-13

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார். அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால், ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த சட்டத்திற்கு தடை கோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பைட் டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், வருகிற 19-ந்தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்த செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதற்கிடையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக வரும் வருகிற 20-ந்தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம் என்றும், மேலும் சில காலத்திற்கு அந்த செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார். ஜான் சாயரை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரலாக சமீபத்தில் டிரம்ப் நியமனம் செய்திருந்தார். தற்போது சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக டிரம்ப் அந்த மனுவில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து