முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் தேசிய தின விழா புதுச்சேரியில் கடைபிடிப்பு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா
Pondy 2024-07-07

Source: provided

புதுச்சேரி : 1789-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் இருந்த மன்னராட்சி மக்கள் புரட்சி மூலம் தகர்த்து முடிவுக்கு வந்தது.

மக்களாட்சியை நிறுவிய இந்த தினம் பிரான்ஸ் நாட்டு தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி ஜூலை 14-ந் தேதி புதுவை பிரெஞ்சு தூதரகத்தில் தேசிய தின விழா நடந்தது.

விழாவுக்கு பிரெஞ்சு துணை தூதர் லிசே போட் பரே தலைமை தாங்கி பிரெஞ்சு தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சியும், விருந்தும் நடந்தது. விழாவிற்கு முக்கிய பிரமுகர்கள், பிரெஞ்சு குடிமக்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர்.

அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே தூதரகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விழாவையொட்டி பிரெஞ்சு தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு தூதரகம் எதிரே வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கடற்கரையில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து