முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. பொறுப்பில் இருந்து முகுந்தன் திடீர் விலகல்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
PMK 2024-12-29

Source: provided

சென்னை : பா.ம.க. ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் வருங்கால திட்டங்கள் குறித்து ராமதாஸ் கேட்டறிந்து வந்தார்.

இந்த கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார். இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த டாக்டர் ராமதாஸ், "இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்" என்று அவர் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறி விட்டு மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் பா.ம.க. ஊடகப்பேரவை இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பா.ம.க. இளைஞரணித் தலைவர் பதவியும் வேண்டாம் என்றும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே தொடர முகுந்தன் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தன்னால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட கூடாது என்பதற்காக இளைஞர் அணி தலைவர் பதவி வேண்டாமென முகுந்தன், ராமதாசிடம் தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முகுந்தனுக்கு பதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்படுவது உறுதியான பிறகே தந்தை ராமதாசை சந்திக்க அன்புமணி புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து