முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம்: சீமானுக்கு தி.மு.க. கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Seeman 2024-12-29

Source: provided

சென்னை : காலை உணவுத்திட்டம் பற்றி விமர்சனம் செய்த சீமானுக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022 முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

60 வருடமாக ஆட்சி செய்து காலையில் சாப்பிட்டு வரமுடியாத நிலைமையில்தான் நமது பிள்ளைகளை வைத்துள்ளீர்களா? இது என்ன சோமாலியா, கென்யா, நைஜீரியா மாதிரி இருக்கிறதா? எல்லா வளமும் இருக்கிறதே. காலையில் என்ன சாப்பாடு தருகிறார்கள், பால், முட்டை போலவே தருகிறார்கள்? 7 நாட்களில் 5 நாட்கள் உப்புமா தான் போடுகிறார்கள், இது காலை உணவித் திட்டாமா இல்லை உப்புமா கம்பெனியா? நீங்கள் உப்புமா கம்பெனிதான் நடத்துகிறீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தரப்பு, தாய்மார்கள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளார்கள், ஆனால் சீமான் பேச்சு தமிழர்களுக்கு எதிரானது, அவரது அரசியல் என்பது இவ்வளவுதான் என்றும் தற்குறித் தனமானது என்றும் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து