முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனை அமைப்பதற்காக மொரோக்காவில் மலை ஏறி 6 வயது சிறுமி புதிய சாதனை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2024      உலகம்
Morocco 2024-09-09

லண்டன், மொரோக்காவில் உள்ள 13 ஆயிரம் அடி உயரம் கொண்ட மலைச்சிகரம் மீது தந்தையுடன் சேர்ந்து ஏறி 6 வயது சிறுமி சாதனை படைத்து உள்ளார்.

மொரோக்காவில் உள்ள அட்லஸ் மலைத்தொடரில் உள்ள தொபுக்கல் மலைச்சிகரம் வடக்கு ஆப்ரிக்காவின் உயரமான மலைச்சிகரமாக கருதப்படுகிறது. இது 13 ஆயிரம் அடி உயரம் கொண்டது. பிரிட்டனைச் சேர்ந்த செரன் பிரைஸ் என்ற 6 வயது சிறுமி, இதன் மீது ஏறி சாதனை படைத்துள்ளார். குழந்தையாக இருந்த போது, தன்னை காப்பாற்றிய மருத்துவமனைக்கு நிதி திரட்டுவற்காக இச்சாதனையில் ஈடுபட்டார். அவருக்கு துணையாக தந்தை கிளைனும் உடன் சென்றார். மற்றொரு மருத்துவமனைக்காக நிதி திரட்டுவதற்காக ஐரோப்பாவின் மிக உயரமான பிளான்க் மலைச்சிகரத்தில் ஏற இருவரும் முடிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பிளைன் கூறியதாவது: மொரோக்காவில் வெப்பநிலை தான் பெரிய சவாலாக இருந்தது. மலை மீது ஏறியதும் சூழ்நிலை மொத்தமாக மாறியது. எங்களின் முயற்சியை சமூக வலைதளத்தில் பின் தொடர்ந்தவர்கள் அனைவரும், பாராட்டு தெரிவித்தனர். இதற்காக ஒரு ஆண்டு கடும் முயற்சி செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து