முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ்-அன்புமணி மோதல்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Ramdos 2024-12-28

Source: provided

புதுச்சேரி : புதுச்சேரி பா.ம.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது.

முகுந்தன் என்பவரை மாநில இளைஞரணி தலைவராக நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். பா.ம.க. கட்சியில் சேர்ந்து 4 மாதங்கள் ஆனவருக்கு பதவி அளிப்பதா என மேடையிலேயே அன்புமணி கேள்வி கேட்டார். நான் யாரை நியமிக்கிறேனோ அவர்கள் தான் நிர்வாகிகள் என்றும் நான் உருவாக்கிய கட்சி என பல முறை அழுத்தமாக கூறினார். எனது முடிவை ஏற்காதவர்கள் வெளியேறி விடலாம் என ராமதாஸ் கூறியதும், மேடையிலேயே சரி சரி என அன்புமணி கூறினார்.

அன்புமணிக்கு முகுந்தன் துணையாக இருப்பார் என ராமதாஸ் கூற, தேவையில்லை என அன்புமணி பதில் கூறினார். சரி சரி என கூறிய அன்புமணியிடம் வெளியேறுவது என்றால் வெளியேறு என்று ராமதாஸ் கூறினார். பனையூரில் எனக்கு அலுவலகம் உள்ளது. அங்கு வந்து தொடர்பு கொள்ளுங்கள் என மைக்கை எறிந்து விட்டு அன்புமணி சென்றார். முகுந்தன் என்பவர் அன்புமணியின் சகோதரி மகன் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து