முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை நேரில் அழைத்து பாராட்டிய பிரதமர்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      இந்தியா
Modi 2024-12-28

Source: provided

புதுடெல்லி : உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் உலக செஸ் வரலாற்றில் இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையை 18 வயதான குகேஷ் பெற்றார். இவருக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11.5 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சார்பிலும் அவருக்கு ரூ. 5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

மேலும் சாம்பியன் குகேஷுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் குகேஷை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது குகேஷ், பிரதமர் மோடிக்கு தான் மற்றும் டிங் லிரேன் கையெழுத்திட்ட இறுதிப்போட்டியில் விளையாடிய செஸ் போர்டை நினைவு பரிசாக வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து