எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : அரசியல் இருப்பைக் காட்ட தமிழ்நாட்டு மாணவியரிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகிவிடும் என கோயபல்ஸ் பாணி பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி. திராவிட மாடல் ஆட்சியில் துணிச்சலாக பெண்கள் புகார் அளிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் புகாரளித்தவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதமாக தினமும் அவரது நடவடிக்கைகள் மாறி வருகின்றன.
தினமும் அந்த நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஊடகங்களில் செய்தியாக்குவதை ஒரு அஜெண்டாவாக வைத்திருக்கும் பழனிசாமியின் நடவடிக்கைகள் பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சி காணும் அவரது சேடிஸ்ட் மனநிலையையை காட்டுகிறது. இனி புகாரளித்தால் நம்மை வைத்து அரசியல் செய்துவிடுவார்கள் என்ற பயத்தை பெண்களிடம் உருவாக்கவே பழனிசாமி திட்டமிடுகிறார் என தோன்றுகிறது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு வெளிப்படையான நேர்மையான நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர். ஆனால் ஊடகத்தில் வந்த செய்தி ஊடகத்தில் வந்த செய்தி என சொல்லி வதந்திகளை மட்டும் தானே பழனிசாமி பரப்பி வந்துள்ளார்?
அரசிடம் நேர்மையும் உண்மையும் இருக்கும் காரணத்தினால்தான் அதிமுக முன்வைக்கும் விமர்சனங்களுக்கு உடனுக்குடன் எங்கள் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளுக்கும் வெளிப்படையாக பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. காவல்துறைதான் எப்.ஐ.ஆர். யை வெளியிட்டுள்ளது என்ற அபாண்ட பொய்யை பாஜகவுடன் சேர்ந்து பரப்பினார். சென்னை மாநகர காவல் ஆணையர் எப்.ஐ.ஆர். யை காவல்துறை வெளியிடவில்லை மத்திய அரசு ஐ.பி.சி யிலிருந்து பி.என்.எஸ்.க்கு மாற்றம் செய்ததால் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்சனையால் எப்.ஐ.ஆர்.வெளியானது என விளக்கம் அளித்தார்.
ஆனால் அதையும் ஏற்காமல் தொடர்ந்து பொய் பரப்பி வந்தார் பழனிசாமி. தற்போது எப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் மத்திய அரசு இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று மத்திய அரசின் தேசிய தகவலியல் மையமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது. அற்பத்தனமாக பொய் பேசிய பழனிசாமி, நியாயமாக மக்கள் முன் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்டாரா இல்லை அடுத்த பொய்க்கு தாவிவிட்டார்.
குற்றவாளி ஞானசேகரன், 'சார்' என்று போனில் யாரிடம் பேசினான் என்று கேட்கிறார். அவன் அந்த மாணவியை மிரட்டுவதற்காகவே அப்படி போனில் பேசுவதாக நடித்திருக்கிறான் என காவல்துறை ஆணையர் விளக்கியிருக்கிறார். விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அரசு உத்தரவாதம் அளித்திருக்கிறது.
இப்படி உண்மைகள் வெளிப்படையாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. உண்மைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அற்ப அரசியலில் ஈடுபடும் பழனிசாமி ஏதையோ மறைப்பதாக உளறி வருகிறார். இந்த வதந்தி அரசியல் எல்லாம் ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியை கண்காணிக்காதது ஏன் என பொங்குகிறார் பழனிசாமி!
கடந்த 2014 முதல் 2019 வரையில் தான் ஞானசேகரன் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளான் அப்போது யார் ஆட்சி செய்தது என்பதை பழனிசாமி மறந்துவிட்டாரா? பல குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க பழனிசாமி ஆட்சி என்ன முயற்சி எடுத்தது? பாலியல் குற்றம் செய்தவனை வெறும் திருட்டு வழக்கு மட்டும் போட்டு குற்றவாளியை தப்பிக்கவிட்ட மோசமான ஆட்சி தான் பழனிசாமியின் ஆட்சி. அப்போதே கடுமையாக தண்டித்திருந்தால் இன்று இதுபோன்ற நிகழ்வே நடந்திருக்காது.
தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் சேர்ந்து அரசியல் நாடகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. மாணவிகளின் கல்விக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் மாணவிகளிடமும் பெற்றோரிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் அதிமுக பாஜக கள்ளக்கூட்டணியின் உள்நோக்கம் என்னவென்று மக்கள் புரிந்து கொள்வார்கள்.
கூசாமல் பொய் சொல்வதில் பச்சை பொய் பழனிசாமிக்கு நிகர் யாரும் இல்லை என்கிற அளவில்தான் அவர் கூறிய நிகழ்வுகள் இருக்கின்றன. பொள்ளாச்சி வழக்கினை சிபிஐ- க்கு உடனடியாக மாற்றினேன் என பெருமையாகக் கூறுகிறார். அதிமுகவின் முக்கிய புள்ளிகள் மறைமுகமகாவும், அதிமுகவின் பொள்ளாச்சி நகர இளைஞரணி செயலாளர் அருளானந்தம் முக்கியக் குற்றவாளியாக இருந்ததாலும், எடப்பாடி பழனிசாமி மீது துளியும் நம்பிக்கை இன்றி பொதுமக்கள், மாணவர்கள், எதிர்கட்சிகள் நடத்திய கடும் போராட்டத்தால் சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் மத்திய பாஜகவோடு அதிமுகவின் கள்ளக்கூட்டணி தொடர்வதால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்னும் விசாரணை முடியாமலேயே இருக்கிறது.
பொள்ளாச்சி முதல் அண்மையில் ராமேசுவரத்தில் குளியலறையில் கேமரா வைத்து கைதானவர்கள் வரை பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக அதிமுகவே இருந்து வருகிறது என்பது கண்கூடு. தனது அரசியல் இருப்பை காட்டிக்கொள்ள அண்ணா பல்கலைக்கழக வழக்கை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவருக்கு நாளும் உளவியல் துன்புறுத்தலை ஏற்படுத்தும் கேவலமான, இழிவான, அருவருப்பு அரசியலை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாட்கள் என்பார்கள் ஆனால் பழனிசாமியின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்பதில்லை. அந்த விரக்தியில் திரும்பத் திரும்ப அதே பொய்களை பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார் பழனிசாமி.
பெண்கள் மீதான வன்முறையை நிகழ்த்துபவர்கள் எவரும் முதல்-அமைச்சரின் ஆட்சியில் ஒரு நாளும் தப்பிக்க முடியாது. கடந்த 2022ம் ஆண்டு பரங்கிமலை ரெயில் நிலையத்தில், ஒருதலை காதலை ஏற்க மறுத்த சத்தியப்பிரியா என்ற கல்லூரி மாணவியை மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த கொலையாளி சதீஸ்க்கு இரண்டே வருடத்தில் முழு விசாரணையும் முடிந்து மரண தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாடு காவல்துறை மற்றும் நீதித்துறை. சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளிக்கு எப்படி விரைவாக அதிகப்பட்ச தண்டனையை இந்த அரசு பெற்றுத் தந்ததோ அதே போல இந்த வழக்கில் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து விரைவான நீதியை இந்த அரசு பெற்று தரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 1 week ago |
-
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
04 Jan 2025விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியான சம்பவத்தில் விதிமீறி குத்தகைக்கு விட்டதால் விபரீதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' தி.மு.க. மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
04 Jan 2025சென்னை: 'ஸ்டாலின் மாடல்' என்பது அதிகார அடக்குமுறைக்கான 'பாசிச மாடல்' என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க., அதற்கு தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளின் வாக்குமூலங்களே சாட்சி என்றும
-
கைதான ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார்: சிறப்பு விசாரணை குழுவிடம் தெரிவித்த பல்கலை. மாணவி
04 Jan 2025சென்னை: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசினார் என்பதை சிறப்பு விசாரணை குழுவிடம் பாதிக்கப்பட்ட பல்கலை.
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன திருவிழா தொடக்கம்
04 Jan 2025சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
சபரிமலை கோயில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரம்
04 Jan 2025கேரளா, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கே.பாலகிருஷ்ணனின் கோரிக்கையை நிச்சயம் தி.மு.க. ஆட்சி நிறைவேற்றும் அமைச்சர் சேகர்பாபு பேட்டி
04 Jan 2025சென்னை: திமுக ஆட்சியை பாராட்டிய கே.பாலகிருஷ்ணனுக்கு என்ன நெருடல்?.
-
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாரதிய ஜனதா
04 Jan 2025டெல்லி: டெல்லியில் முதல்வர் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
-
எரிவாயு லாரி கவிழ்ந்த விவகாரம்: டிரைவர் கைது - 6 பிரிவுகளில் வழக்கு
04 Jan 2025கோவை: கோவையில் சமையல் கியாஸ் எரிவாயு லாரி கவிழ்ந்ததில் டிரைவரை போலீசார் கைது செய்து 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் அதிஷிக்கு எதிராக காங். வேட்பாளர் அறிவிப்பு
04 Jan 2025டெல்லி, டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் முதல்வர் அதிஷியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
பட்டாசு ஆலை பாதுகாப்பில் மெத்தனம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
04 Jan 2025சென்னை: பட்டாசு ஆலை பாதுகாப்பில் தொடர்ந்து தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு: டிரம்பிற்கான தண்டனை அடுத்த வாரம் அறிவிப்பு
04 Jan 2025வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பிற்கான தண்டனை விவரம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.
-
கந்து வட்டி புகார் வழக்கு: நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை
04 Jan 2025குமரி: கந்து வட்டி புகார் வழக்கில் நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
சென்னை மாரத்தான் ஓட்டம்: இன்று சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கம்
04 Jan 2025சென்னை: சென்னையில் இன்று நடைபெற இருக்கும் மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு சிறப்பு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது
04 Jan 2025மும்பை: தங்க கடத்தியதாக மும்பை விமான நிலைய ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்
04 Jan 2025புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் துவக்கி வைத்தனர்.
-
குறைந்த பந்தில் அரைசதம்: விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் ரிஷப் பண்ட்
04 Jan 2025BOX - 1
சிட்னி : குறைந்த பந்தில் அரைசதம் அடித்த விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்துள்ளார்.
-
சீனாவில் புதிய வகை வைரஸ் பரவல்: இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய மத்திய அரசு
04 Jan 2025புதுடெல்லி: சீனாவில் புதிய வகை வைரஸ் பரவலை அடுத்து இந்தியாவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான ஞானசேகரன் வீட்டில் முக்கிய ஆதாரங்களை கைப்பற்றிய சிறப்புக்குழு
04 Jan 2025சென்னை : அண்ணா.
-
சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்: ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக மீட்பு
04 Jan 2025ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் ரூ.120 கோடி சாலை திட்டத்தில் முறைகேடு நடந்ததை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர
-
இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
04 Jan 2025புதுடெல்லி: கிராமங்களில் உள்ள மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வழங்குவதே தனது அரசின் முன்னுரிமை என்றும் இந்தியாவில் கிராமங்களை வளர்ச்சி மையங்களாக மாற்றுவதே நோக்கம் என்று
-
மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்தில் சீறிப் பாய்ந்த வந்தே பாரத் ரெயில் : மத்திய அமைச்சர் பகிர்ந்த வீடியோ வைரல்
04 Jan 2025புதுடில்லி : மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் சென்ற வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தின் போது, ஒரு டம்ளர் தண்ணீர் ஆடாமல் அசையாமல் இருந்த வீடியோவை, சமூகவலைதளத்தில் மத்திய
-
புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம்: சீனா அரசு அறிவிப்பு
04 Jan 2025சீனா, புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்று சீனா அரசு அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
04 Jan 2025சென்னை: தமிழ்நாட்டை சேர்நத பானி பூரி கடை வியாபாரிக்கு ஜி.எஸ்.டி. நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.
-
மின் அஞ்சல் மூலம் அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்
04 Jan 2025சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியை வழங்கினார் அமைச்சர் பொன்முடி
04 Jan 2025விழுப்புரம்: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர் பொன்முடி நேரில் வழங்கினார்.