முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்த என்னை அனைவரும் மறந்து விட்டனர் : சவுரவ் கங்குலி ஆதங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      விளையாட்டு
Ganguly 2023-08-26

Source: provided

புதுடெல்லி : ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்த என்னை அனைவரும் மறந்து விட்டனர் என்று சவுரவ் கங்குலி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தியா வரலாறு...

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 9-வது டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது. இதற்கு முன் ரோகித் கேப்டன் ஆனதிலிருந்து இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகியவற்றில் தோல்வி அடைந்து இருந்தது. இருப்பினும் மனம் தளராமல் 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியை சரியாக வழி நடத்தி ரோகித் வெற்றி பெற வைத்துள்ளார்.

விமர்சித்தனர்...

இந்நிலையில் விராட் கோலிக்கு பின் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தபோது பலரும் தம்மை விமர்சித்ததாக முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தம்முடைய முடிவின் காரணமாக ரோகித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்ற பின் அனைவரும் தம்மை மறந்து விட்டதாக கங்குலி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

மறந்து விட்டனர்...

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "கேப்டன்ஷிப் பொறுப்பை ரோகித் சர்மாவின் கையில் ஒப்படைத்தபோது நான் விமர்சிக்கப்பட்டேன். ஆனால் தற்போது அவருடைய தலைமையில் நாம் உலகக்கோப்பையை வென்றுள்ளோம். தற்போது என்னை யாரும் திட்டவில்லை. ஆனால் ரோகித் சர்மாவை நான் கேப்டனாக நியமித்தேன் என்பதை அனைவரும் மறந்து விட்டனர்" என்று கூறினார். முன்னதாக 2021-ல் விராட் கோலி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ய கங்குலி முக்கிய காரணமாக இருந்ததாக ரசிகர்கள் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து