முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் 2 கிலோ எடை குறைந்தார் கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

புதுடெல்ல, கெஜ்ரிவாலின் உடல் எடை குறித்து ஆம் ஆத்மி தலைவர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள திகார் சிறை நிர்வாகம் இதுதொடர்பாக தில்லி அரசின் உள்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், இது போன்ற ஒரு கதை பொதுமக்களைக் குழப்புவதோடு தவறாக வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறையில் கெஜ்ரிவால் 2 கிலோ மட்டுமே எடை குறைத்துள்ளதாகவும், அவர் எய்ம்ஸ் மருத்துவக் குழுவினால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், இதன் மூலம் கெஜ்ரிவால் உடல் எடை குறைந்திருப்பதை திகார் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை விசாரித்து வரும் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை வழக்கில் முதல்வா் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்  வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இருப்பினும், ஊழல் வழக்கில் அவரை சிபிஐ கைது செய்துள்ளதால், அவருடைய சிறைவாசம் தொடா்கிறது.

இதனிடையே தில்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கையுடன் பாஜகவும், அதன் தலைமையிலான மத்திய அரசும் விளையாடி வருவதாக ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து