முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளைதான் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 15 ஜூலை 2024      தமிழகம்
Sellur-Raju 2024-07-15

Source: provided

மதுரை : தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளைதான் நடக்கிறது என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 122- வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விளக்குத்தூணில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், ஆர்.அண்ணாத்துரை, பா.குமார், பரவை ராஜா, கு.திரவியம், வி.பி.ஆர்.செல்வகுமார், ஜெ.மாணிக்கம், ஜோசப்தனிஸ்லாஸ், எம்.ஜி.ராமச்சந்திரன், தளபதி மாரியப்பன், ஆர்.பாஸ்கரன், சக்திவிநாயகர் பாண்டியன், ஏ.இந்திரா, மீனா, கே.வி.கே.கண்ணன், வி.கணேசன், புதூர் சந்திரன், பிரேமா டிமிட்டிராவ், முத்துமாரி ஜெயக்குமார், எம்.ஏ.நாசர், திடீர்நகர் பாலா, நாகேந்திரன், கோவில் நெடுஞ்செழியன், அய்யப்பன், கிராஸ் ரோடு ராதாகிருஷ்ணன், மலர்விழி, புதூர் நாகராஜ், ராமமூர்த்தி, 43-வது வார்டு முருகன், வட்ட செயலாளர் முருகன், ஜி.மணிகண்டன், ஐ.டி.விங்க் செல்வகுமார், பால்கடை கிருஷ்ணன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-

அ.தி.மு.க. சார்பில் 122-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம். மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை பராமரிக்காமல் இருந்ததை அ.தி.மு.க. ஆட்சியில் மாவட்ட செயலாளர் என்ற முறையில் எனது தலைமையில் 5 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் மரணம், கொலை,கொள்ளை என தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது.

இதில் எப்படி தி.மு.க.வினர் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியும்? சட்டம்-ஒழுங்கு இவ்வளவு சீர்கேட்டு இருக்கும்பொழுது சத்தியமூர்த்தி பவனில் அமர்ந்து கொண்டு இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறிகிறார் தி.மு.க.வை தவிர வேறு யாராலும் காமராஜர் ஆட்சியை கொடுக்க முடியாது என இது எந்த விதத்தில் நியாயம்? என கேள்வி எழுப்பினர்.

பெருந்தலைவர் ஆட்சியை கொண்டு வந்தது எம்ஜிஆர். இவர்களின் இரு பெரும் ஆட்சியை நிலைநாட்டியது ஜெயலலிதா தான்.அ.தி.மு.க. ஆட்சி தான் பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை நிலைநாட்டியது. 

வேகாத வெயிலில் ஓட்டு கேட்டோம். ஓட்டு கேட்டதில் ஏதேனும் குறை இருந்ததா? குறிப்பிட்ட சமுதாயம் இந்தியாவை ஆள வேண்டும் என்பதற்காக மோடிக்கு வாக்களித்தனர். சிறுபான்மையினர் ராகுல் காந்திக்கு வாக்களித்தனர். இதில் அ.தி.மு.க.வினர் நாங்கள் அடிபட்டு விட்டோம். பல இடங்களில் நாங்கள் தோல்வியை தழுவினோம். பல இடங்களில் இரண்டாவது இடம் பெற்றோம். இது குறித்து பொது செயலாளர் எதுவும் கூறவில்லை ஆலோசனைதான் வழங்கினாரே தவிர வேறு ஒன்றும் இல்லை.

மதுரை அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது என்பது எங்களுக்கு தெரியும். தோல்வியை தழுவியது எங்களுக்கு மன உளைச்சல் தான்.மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். மதுரையில் சௌராஷ்டிரா அமைப்பினர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்த வட மாநிலத்தவர்கள், பிராமின்ஸ் உள்ளிட்டோர் மோடிக்கு வாக்களித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு சென்ற திருவேங்கடத்திற்கு கைவிலங்கு போடவில்லை. தப்பி ஓடினார் என்பதற்காக என்கவுண்டர் செய்யப்பட்டிருக்கிறார் என காவல்துறை தரப்பில் கூறுகிறார்கள். இது போன்ற களங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் ஏற்படும். கள்ளச்சாராயம் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து