முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உமர் அப்துல்லா உள்ளிட்ட 239 வேட்பாளர்கள் போட்டி: ஜம்மு காஷ்மீர் 2-வது கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : 26 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு நாளை 2-வது கட்டத் தேர்தல் நடைபெறும் நிலையில், நேற்றுடன் 2-ம் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. 26 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் 59 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் 2-ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (செப்.25) நடைபெற இருக்கிறது. இதனையடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கட்சிகள் தீவிரம் காட்டின.  முன்னதாக நேற்று மாலை 5 மணியுடன் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவடைந்தது. முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அப்னி கட்சியின் அல்தாப் புகாரி, பாஜகவின் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட 239 வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் இந்தக் கட்டத்தில் களத்தில் உள்ளனர்.

இதனையொட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் மேகம் தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் வாகன பேரணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். நேற்று ராகுல் காந்தி ஸ்ரீநகரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். மற்ற கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. பாஜகவை பொறுத்தவரை அமித் ஷா தீவிர பரப்புரை மேற்கொண்டார். 

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளும் பிரதான கட்சிகளாக கருதப்படுகின்றன. காங்கிரசுடன், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சி, அவாமி இதிஹாத், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சிக்கலாம் என்பதால் ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர், ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து