முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெறும் விளம்பரத்தால் என்ன பயன்? - மதுக்கடைகளை குறைக்க பாருங்கள்: அரசுக்கு ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை : குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? என்று அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் மதுக்கடைகளை குறைக்க பாருங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பூதிபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், பூதிப்புரம் ராஜபூபால சமுத்திர கண்மாய் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் பெண்கள் கழிவறையும், கண்மாய் கரைப்பகுதியும் உள்ளது.

மேலும், அங்கு ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில், 4-வதாக ஒரு கடை தேவை இல்லை. புதிய டாஸ்மாக் திறப்பதை தடை செய்ய வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக வழக்கு விசாரணையின்போது, குடி குடியை கெடுக்கும் என்று டிவியில் அரசு விளம்பரம் செய்வதில் என்ன பயன் உள்ளது? இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழிபாருங்கள், மூலைமுடுக்கெல்லாம் மதுக்கடைகள் உள்ளன. இதை அதிகரிப்பதால் என்ன பயன்? என்று சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து