முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய குற்றாலம் அருவியில் மீண்டும் குளிக்க அனுமதி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Koorala-Falls 2024-07-14

Source: provided

தென்காசி : பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கம்பிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டு சேதம் அடைந்தது.

வெள்ள நீர் குறைந்த சில நாட்களிலேயே மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பழைய குற்றால அருவி பகுதியில் எவ்வித சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. விவசாய சங்கங்கள், சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் என பலரும் பழைய குற்றால அருவியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பழைய குற்றால அருவியில் தண்ணீர் சீராக விழுந்து வரும் நிலையில் அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் அருவி கரையை சுற்றி பாதுகாப்பு கம்பிகள் மீண்டும் அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளித்து செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து