முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலைக்கழக மாணவி வழக்கில் உண்மை கண்டறிய குழு அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Vijaya-Kishore 2024-10-22

Source: provided

சென்னை : மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன்(37) என்ற நபரை கைது செய்தனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் விஜயா ரஹாத்கர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுவில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் மராட்டிய மாநில முன்னாள் டி.ஜி.பி. பிரவீன் தீட்சித் ஐ.பி.எஸ்.,(ஓய்வு) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் நாளை சென்னைக்கு வர உள்ளனர். இந்த விசாரணைக்கு குழுவினர் பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி மாணவர்கள், வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் உள்பட வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து