முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை பண்ணை வீட்டில் 4 பேர் தற்கொலை

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Thiruvannamalai

Source: provided

தி.மலை : தீருவண்ணாமலை பண்ணை வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பக்தர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆன்மிக பயணமாக வந்தனர். அவர்கள் கிரிவலப்பாதையில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வெளியே வராததால், அங்கு வேலை செய்த பணியாளர்கள் சந்தேகமடைந்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் அங்கு வந்த போலீசார், கதவை திறந்து பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்தனர். இதையடுத்து, உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்து டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், நாங்கள் இறைவனிடம் செல்கிறோம் என எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த யாசர்(45), அவரது மனைவி பிரியா(40), இவர்களது மகள் ஜலந்தரி மற்றும் மகன் ஆகாஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து