முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜி நாட்டில் தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவக்கம் : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : தொன்மையான தமிழ் மொழியால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். 117-வது நிகழ்ச்சி நேற்று ஒலி பரப்பானது. இந்த ஆண்டின் கடைசி 'மன் கி பாத்' உரையில் மோடி பேசியதாவது:-

அடுத்த ஆண்டு முதல்முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இந்தியாவில் நடக்கிறது. மீடியா, பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவான்கள், படைப்பாற்றல் உலகைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். நாட்டு மக்களை இந்திய அரசியல் சாசன மரபுடன் இணைக்க ஏதுவாக constitution75.com என்ற பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனமே நமக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குகிறது.

உலகிலேயே மிகத்தொன்மையான மொழி தமிழ் மொழியாகும். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையாகும். இது எங்களுக்கு பெருமையான விஷயம். உலக நாடுகளில் தமிழ்மொழியை கற்று கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாத இறுதியில் பிஜியில் மத்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 80 ஆண்டுகளில் பிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பது இதுவே முதல் முறையாகும். பிஜி நாட்டு மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.

கலை முதல் ஆயுர்வேதம் வரையிலும், மொழியில் இருந்து இசை வரையிலும் உலகில் முத்திரை பதித்து கொண்டு இருக்க இந்தியாவில் நிறைய இருக்கிறது. இந்த குளிர்காலத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி தொடர்பானவை நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. காஷ்மீரில் பனி சறுக்கு முதல் குஜராத்தில் பட்டம் விடுதல் போட்டி வரை விளையாட்டுக்கான உற்சாகம் காணப்படுகிறது. சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் விதமாக பிரசாரம் செய்யப்படுகிறது. காய்கறிக்காக ஒரு காலத்தில் விவசாயிகள் இடம் பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று ஒடிசாவின் கலஹண்டியின் கோல் முண்டா காய்கறி மையமாக மாறியுள்ளது. இது 45 பெண் விவசாயிகள் உள்பட200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இணைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து