முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      இந்தியா
ISRO PSLV-2024-12-05

Source: provided

ஸ்ரீஹரிகோட்டா : பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் நேற்று அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று இரவு 9.58 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இறுதிகட்ட பணியான 25 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று இரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் ‘ஸ்பேடெக்ஸ்-ஏ’. ‘ஸ்பேடெக்ஸ்-பி’ என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.

பூமியில் இருந்து 470 கி.மீ. உயரத்தில் வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் 2 செயற்கை கோள்களும் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதன்படி வருகிற 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ எனும் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ எனப்படும் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த சூழலில் ‘ஸ்பேஸ்-எக்ஸ்’ திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி. சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் தயார் நிலையில் நேர் நிறுத்தப்பட்டு உள்ளது. இது நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும், விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும் தனித்தனியாக இரு விண்கலங்களை விண்ணில் ஏவி அவற்றை இணைய செய்வதற்கான சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து