முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்ட புதிய கண்ணாடி நடைபாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
CM 2024-12-16

Source: provided

குமரி : திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய கண்ணாடி நடைபாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று கன்னியாகுமரிக்கு வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு குமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு வந்ததும் மாலை 6 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலின் நடுவே அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தையும் திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி காட்சியை அவர் கண்டுகளிக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. இந்த கொடிகள் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை உள்ள கடல் பகுதியில் மிதவைகள் மூலம் பறக்க விடப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து