முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி வழக்கு: தேசிய மகளிர் ஆணையம் இன்று முதல் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
National-Commission 2023 06

Source: provided

சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் மகளிர் ஆணையம் இன்று விசாரணை மேற்கொள்கிறது. இவ்வழக்கை விசாரிக்க ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை வந்த மகளிர் ஆணைய அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்குகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் செய்யும் வழக்கத்தைக் கொண்டவர் என அறிந்தபோதும் முந்தைய வழக்குகளில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

இந்த அலட்சியம் குற்றங்களைச் செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று அந்த ஆணையம் குறிப்பிட்டிருந்தது. முன்னதாக இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாராணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து