முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாங்காங் ஏரி கரையில் 14,300 அடி உயரத்தில் சத்ரபதி சிவாஜி சிலை : இந்திய ராணுவம் திறப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      இந்தியா
Indian-Army 2024-12-29

Source: provided

லடாக் : கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு, பாங்காங் ஏரிக்கரையில் இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரா்கள் வீரமரணமடைந்தனர். இந்த மோதலில் தங்கள் வீரா்களின் மரணம் குறித்து சீனா அதிகாரபூர்வமாக ஏதும் தகவலளிக்கவில்லை. இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நீடித்து வந்த மோதல் போக்கு, பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அண்மையில் முடிவுக்கு வந்தது. டெப்சாங், டெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த அக்டோபரில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) பகுதிக்கு அருகே 14,300 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்காங் ஏரிக் கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலையை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. லடாக்கின் லேவைத் தளமாகக் கொண்ட ‘14 கார்ப்ஸ்’ ராணுவப் படைப் பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹிதேஷ் பல்லா கடந்த டிச. 26-ம் தேதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வீரம், தொலைநோக்குப் பார்வை மற்றும் வலுவான நீதியின் உயர்ந்த சின்னமாக சத்ரபதி சிவாஜியின் சிலை திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் சத்ரபதி சிவாஜியின் அசைக்க முடியாத புகழைக் கொண்டாடுகிறோம். அவருடைய வீர பாரம்பரியம் பல தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருந்துவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து