முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக அமெரிக்காவின் ஏவுகணை தடுப்பு அமைப்பை பயன்படுத்திய இஸ்ரேல்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      உலகம்
Israel 2024-12-29

Source: provided

இஸ்ரேல் : ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசிய நிலையில், அதை தடுக்க அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தி உள்ளது. 

ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர். இதனை டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை கடந்த அக்டோபர் மாதம் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கியது.

இந்நிலையில் அந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தாட் அமைப்பு இடைமறிக்கும் கருவியை ஏவுவதும், அதைத் தொடர்ந்து ஒரு அமெரிக்க வீரர், பதினெட்டு ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறுவதும் பதிவாகி உள்ளது.

தாட் அமைப்பு பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவற்றின் முனைய கட்டத்தில் இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து