முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாஸ் - அன்புமணி மோதல் குடும்ப சண்டை : கனிமொழி எம்.பி. கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Kanimozhi 2023-05-04

Source: provided

ராமநாதபுரம் : ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் நடந்தது குடும்ப சண்டை என்று ராமதாஸ் மற்றும் அன்புமணி மோதல் குறித்து கனிமொதி எம்.பி கருத்து தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கடந்த 2014-ம் ஆண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர். அப்போது அவர் மீது திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர் மீது பாலியல் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தால் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு இருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்போதைய அரசு பொள்ளாச்சி வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வழக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு சரியான தண்டனை கிடைப்பதற்கு இந்த அரசு வழிவகை செய்யும்.

பா.ம.க. கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் நடந்தது குடும்ப சண்டை. அதுகுறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அண்ணாமலைக்கு என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து