முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அறநிலையத்துறைக்கு தங்க காணிக்கைகள் டெபாசிட் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம் : அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்ட மூலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெய்வ திருவுருவ படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள 2025-ம் ஆண்டிற்கான நாட்காட்டியை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆணையர் ஶ்ரீதர், கூடுதல் மற்றும் இணை ஆணையர்கள் உடனிருந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

திருக்கோவிலுக்கு காணிக்கையாக வந்த தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தை எவ்வளவு பேர் எதிர்த்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் கடந்த மூன்றரை ஆண்டில், இத்திட்டம் மூலம் திருக்கோவில்களுக்கு சுமார் ரூ.10 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியவர்கள் கூட, தற்போது பாராட்டி வருகின்றனர்.

அறங்காவலர்கள் நியமனத்தில் பல நிபந்தனைகள் உள்ளன. சட்டத் திருத்தத்திற்கு உட்பட்டு பணியாளர்களை நியமிக்க அரசு பணியாற்றுகிறது 20 ஆயிரம் கோவிலுக்கு அறங்காவலர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அறநிலையத்துறை சட்ட விதிகளில் மாற்றம் செய்வது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து