முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்கலை. மாணவி விவகாரம்: புதுச்சேரி அமைச்சர் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 29 டிசம்பர் 2024      தமிழகம்
Namachivayam 2024-03-17

Source: provided

ஸ்ரீவில்லிபுத்தூர் : பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவிக்கு குரல் கொடுக்கக்கூட தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தயாராக இல்லை என புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது மனைவியுடன் நேற்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அப்போது மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயரை சந்தித்து ஆசி பெற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-  இதில் ஆன்மிகம் செழிக்கும் நாடு சிறப்பாக இருக்கும் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. நமது முன்னோர்கள் காட்டிய வழியிலேயே நாமும் பயணித்து, நாமும் நமது நாடும் சிறப்புற வாழ வேண்டும்.

அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விஷயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்ததோடு நின்றுவிடாமல், அறவழியில் தன்னுடைய போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு அவரே கொடுத்துக் கொண்ட சவுக்கடி அல்ல, இந்த ஆட்சிக்கு கொடுத்துள்ள சவுக்கடி. அண்ணா பல்கலை விவகாரம் தொடர்பாக முதல்வரோ,  துணை முதல்வரோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காதது வருத்தம் அளிக்க கூடியது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு குரல் கொடுக்காத தி.மு.க. கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் அண்ணாமலை நடத்திய போராட்டத்தை தான் விமர்சிக்கிறார்கள். இதன் மூலம் மக்கள் மீது அவர்கள் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணா பல்கலை விவகாரத்தில் தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து