முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் சென்னை வந்தனர்: அமைச்சர் நாசர் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2024      தமிழகம்
Gujarat 2024-09-01

சென்னை, குஜராத் அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் நேற்று பத்திரமாக சென்னை வந்திறங்கினர்.அவர்களை அமைச்சர் நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதை தொடர்ந்து  அவர்கள் அரசு சார்பில் அவரவர் சொந்த ஊருக்கு  அனுப்பி வைக்கப்பட்டனர். 

தமிழகத்தில் இருந்து குஜராத் மாநிலம் பாவ் நகருக்கு புனித யாத்திரை சென்று திரும்பும் போது 26 தமிழர்கள் வெள்ளத்தில் சிக்கினர். 

குஜராத் அருகே மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் சென்ற பஸ் சிக்கிக் கொண்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழக அரசின் அயலக தமிழர் நலத்துறை குஜராத் அரசுடன் பேசி மீட்கப்பட்டவர்களை பாதுகாப்பாக ரயில் மூலம் சென்னை அனுப்பி வைத்தனர். 

அதிகாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு ரயில் வந்தது. அதில் வந்த 26 பேரையும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்பு தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்த வாகனத்தின் மூலம் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்த மக்கள் கூறியதாவது:-

குஜராத்தில் பெய்த தொடர் மழையில் நாங்கள் சென்ற வாகனம் தரை பாலத்தில் சிக்கி கொண்டது. வெள்ள நீர் மெல்ல மெல்ல உயர்ந்த போது என்ன செய்வது என்று தவித்த நிலையில் அங்கிருந்த அதிகாரிகள் மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் குஜராத் அரசிடம் பேசி எங்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தனர். 

பாதுகாப்பாக சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று  கூறினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து