முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. பேரணி விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
Shekharbabu 2024-06-24

Source: provided

சென்னை : தே.மு.தி.க. அமைதி பேரணிக்கு காவல்துறை தடை விதித்த நிலையில், அதனை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைதி பேரணி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னதாக அறிவித்து இருந்தார். அதன்படி கோயம்பேடு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து நினைவிடம் வரை பேரணியாக செல்ல தே.மு.தி.க திட்டமிட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விஜயகாந்த் நினைவிடத்தில் தே.மு.தி.க. தொண்டகர்கள் குவிந்த நிலையில், இதனால் சென்னை கோயம்பேடு பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக தே.மு.தி.கவின் அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது.

காவல்துறையினரின் தடையை மீறி தே.மு.தி.க.வினர் அமைதி பேரணி மேற்கொண்டனர். இந்த நிலையில், தே.மு.தி.க. பேரணி விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். தி.மு.க. சார்பில் விஜயகாந்தின் குருபூஜையில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களின் மனங்களில் விஜயகாந்த் என்றென்றும் நிலைத்திருப்பார். விஜயகாந்தின் மீது மாறாத பற்றின் காரணமாகவே முதலமைச்சர் என்னை அனுப்பியுள்ளார். அனுமதி இல்லையென்றாலும் தே.மு.தி.க. பேரணி அமைதியாகவே நடைபெற்றுள்ளது. இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து