முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் இடதுசாரி தலைவர் சுட்டுக் கொலை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Gun 2023-10-05

அர்வால், பீகாரில் இடதுசாரி தலைவர் ஒருவர் மர்ம நபர்களால்  சுட்டுக் கொல்லப்பட்டார். 

பீகார் மாநிலம் அர்வால் மாவட்டம் கிஞ்சார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்கன் பிகா கிராமத்தை சேர்ந்த சுனில் சந்திரவன்ஷி என்பவர் இடதுசாரி கட்சியான சி.பி.ஐ (எம்.எல்.) கட்சியின் உள்ளூர் தலைவராவார். இந்நிலையில் சுனில் சந்திரவன்ஷி நேற்று முன்தினம் மாலை உள்ளூர் சந்தைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, ​​பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 

அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் சரிந்த சுனில் சந்திரவன்ஷியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அர்வால் எஸ்.பி. ராஜேந்திர குமார் பில் கூறுகையில், முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வோம். தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து