முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தது தி.மு.க.

சனிக்கிழமை, 3 ஜூன் 2023      தமிழகம்
DMK-Offces 2023 03 31

Source: provided

புவனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது. 

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும், நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. 

இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பிப் பாடுபட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று தி.மு.க.  தலைவர் முடிவு செய்துள்ளார்.

ஆகவே முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  சிலைக்கு மட்டும் மரியாதை செலுத்தி, இந்த பயங்கரமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் தொடர்பாக இன்று(நேற்று) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்,  பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் வடசென்னையில் நடைபெறுவதாக இருந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கப் பொதுக்கூட்டம் வேறொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து