முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: மாநில காவல்துறை தகவல்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Manipur 2024-09-10

இம்பால், மணிப்பூரில் பதட்டம் இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி - குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பின்னர் நிலைமை சீராகி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரோன், வெடிமருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் மூலமாக ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனைக் கண்டித்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத டிஜிபி, மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கவர்னர் மாளிகையை நோக்கி நேற்று முன்தினம் (செப்.10) நடைபெற்ற பேரணியில் பாதுகாப்புப் படையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர், தடியடி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் 'மணிப்பூரில் (நேற்று) நிலைமை பதட்டமாக உள்ளது, ஆனால் கட்டுக்குள் இருக்கிறது' என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க காவல்துறை, பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து