முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யாகி புயல் : வியட்நாமில் பலி எண்ணிக்கை 226 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      உலகம்
Vietnam 2024-09-13

Source: provided

ஹனோய் : வியட்நாமில்  யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது. 

பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. 

வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது. இதில், யாகி புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட கனமழையில் வியட்நாமின் வடக்குப் பகுதி மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

அங்கு கனமழை, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவுகளில் சிக்கி 219 பேர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வெள்ள நீரில் மூழ்கிய கிராமங்களில் இருந்து நேற்று முன்தினம் மேலும் 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. அதையடுத்து, வியட்நாமில் மட்டும் யாகி புயல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 226-ஆக அதிகரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து