முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்தில் காயமடைந்த குன்றக்குடி கோவில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Elephant 2024-09-13

Source: provided

காரைக்குடி : குன்றக்குடியில் சண்முகநாத பெருமான் கோவில் யானை தங்கியிருந்த கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த யானை உயிரிழந்தது.

காரைக்குடி அருகே குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு கடந்த 1971-ம் ஆண்டு பக்தர் ஒருவரால் யானை சுப்புலட்சுமி வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள தகரக் கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது. வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அடியில் ஓலை வேயப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு கூடாரத்தில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மளமளவென ஓலையில் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் யானை சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது.  

வனத்துறை, கால்நடை பராமரிப்புத் துறையினர் கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று  முன்தினம் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது. யானை உடலுக்கு பொன்னம்பல அடிகளார் மற்றும் பக்தர்கள் அஞ்சலி செலுத்தினர். கோவில் யானை உயிரிழந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து