முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் - வீராங்கனை 2 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : ஐ.சி.சி. ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்தவகையில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர்-வீராங்கனையாக இலங்கையை சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர்.

தலா 3 வீரர்கள்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

இலங்கையை சேர்ந்த..

அதில் வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் ஹர்ஷிதா மாதவி, அயர்லாந்தின் கேபி லூயிஸ், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹர்ஷிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து