முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி பிரமோற்சவ விழா: மலைப்பாதையில் 3 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Tirupati-2024-09-19

திருப்பதி, கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 4-ம் தேதி வருடாந்திர பிரமோற்சவ விழா கோலாகலமாக தொடங்குகிறது. 12-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  

விழாவில் 8-ம் தேதி கருட சேவை நடக்கிறது.  கருட சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள் என்பதால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கேலரிகள் வசதி செய்யப்படுகிறது. மேலும் பிரத்யேக வாசல்களும் அமைக்கப்படுகின்றன. 

முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளுடன் வரும் பெற்றோர் உட்பட அனைத்து சிறப்பு தரிசனங்களும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருட சேவையையொட்டி 7-ம் தேதி இரவு 9 மணி முதல் 9-ம் தேதி காலை 6 மணி வரை 2 மலைப்பாதைகளிலும் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு கருட சேவை நடந்தது. நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 78,690 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 86 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 4.18 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 மேலும் புரட்டாசி மாத இலவச தரிசனம் செய்ய விரும்புவோர்  திருப்பதி ரெயில் நிலையம் எதிரில் உள்ள விஷ்ணுநிவாஸ், அலிபிரியில் பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் தினசரி அதிகாலை 2 மணி முதல் டோக்கன் பெறலாம். டோக்கன் வாயிலாக அன்றோ அல்லது அடுத்த நாளோ குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்ய முடியும் 

சந்திரகிரியில் இருந்து ஸ்ரீவாரி மெட்டு வழியாக படியேறி தரிசனம் செய்ய காலை 6 மணிக்கு தினசரி, 3,000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து