முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயான சாம்பலில் ரூ.377 கோடி வருவாய் ஈட்டிய ஜப்பான் அரசு

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2024      உலகம்
Japan 2024-03-30

Source: provided

டோக்கியோ :  இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ஜப்பான் அரசு  ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜப்பானில் வருடம் தோறும் சராசரியாக 15 லட்சம் பேரின் சடலங்கள் எரிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  அங்குள்ள மக்கள் தங்களின் பற்களை அடைக்க தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்துகின்றனர். 

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் உயிரிழந்த பிறகு, எரிக்கப்படும் சாம்பல்களில் உலோகங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அதனை விற்று பல்வேறு ஜப்பானிய நகரங்கள் பணம் சம்பாதிக்கின்றன.   

ஜப்பானில் 97 சதவீத மயானங்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. இதன் மூலம் அரசு அதிக லாபம் சம்பாதிக்கின்றது. கடந்த 2023-ம் ஆண்டு மட்டும், இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ரூ. 377 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 

குறிப்பாக கியோடா நகரம், யோகோஹாமா நகரம், நகோயா நகரம் அதிகம் லாபம் சம்பாதிப்பதாக, அரசு தெரிவித்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து