முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலாம் ஆண்டு நினைவு நாள்: விஜயகாந்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
stalin 2024-12-28

Source: provided

சென்னை: தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு டிச.28-ம் தேதி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் காலமானார். அவரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்திய நிலையில், இறுதிச் சடங்கில் அரசு மரியாதையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையில் கட்சித் தலைமையகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு, அங்கு நாள்தோறும் பூஜையும், அன்னதானமும் செய்யப்படுகிறது. 

இந்நிலையில், விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, அரசியல் தலைவர்கள் அவரின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக நேற்று காலை சென்னை கோயம்பேட்டில் அவரது நினைவிடத்துக்கு தே.மு.தி.க.வினர் பேரணியாகச் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சமூகவலைதளத்தின் வாயிலாக புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “மாசற்ற மனதுக்கும், தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் - கேப்டன் விஜயகாந்தை நினைவுகூர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து