முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 28 டிசம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2024-12-28

Source: provided

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்கவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான அறிக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வு குழுவை சென்னை ஐகோர்ட் அமைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு தானாக முன்வந்து குழு அமைக்க ஒப்புக்கொண்டது. அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும், மாணவியின் விவரங்கள் வெளியானதால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து